என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எதுகை மோனையில் பேசி சிக்கியவர் - செல்லூர் ராஜு பற்றி ராமதாஸ் கிண்டல்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் பற்றி அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘‘ரஜினி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்’’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பெண்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு செருப்புகளை பார்சலில் அனுப்பினர்.
இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு தனது கருத்துக்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார்.
ரஜினி பற்றி நிருபர்கள் கேள்விகேட்ட போது நான் அந்த பதிலை அளித்தேன். ரஜினிகாந்த் சினிமாவில் மனோரமாவுடன் தாய்- மகன் பாசத்தோடு இணைந்து நடித்ததை வைத்து தான் அப்படி தெரிவித்தேன். நகரத்தார் சமுதாய மக்களை குறிப்பிட்டு அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்களின் மனம் புண்பட்டு இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜு எதுகை மோனையில் பேசி சிக்கிக் கொண்டது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
ஒரு புதிர். தமிழக அரசியல்வாதிகளில் இவர் ஒரு விஞ்ஞானி. நாகரீகம் போற்றும் சமூக விஞ்ஞானியும் கூட.
ஆட்சியை பிடிப்பது பற்றி எதுகை, மோனையாக பேசி சிக்கிக் கொண்டவர். தமிழக அரசியல் போரடிக்காமல் கலகலப்பாக வைத்திருப்பதில் இவரது பங்கு அதிகம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #SellurRaju