search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்தது

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் சரிந்து கொண்டே வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

    நேற்று முன்தினம் 808 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை இது 611 கன அடியாக குறைந்தது. இன்று மேலும் குறைந்து 433 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்து. நேற்று மாலை 6 மணி முதல் நீர்திறப்பு வினாடிக்கு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் சரிந்து கொண்டே வருகிறது.

    நேற்று முன்தினம் 34.62 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 34.33 அடியாக சரிந்தது. இன்று காலை இது 34.06 அடியாக குறைந்துள்ளது.

    Next Story
    ×