search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் வற்புறுத்துவோம்: நாராயணசாமி பேட்டி
    X

    நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் வற்புறுத்துவோம்: நாராயணசாமி பேட்டி

    நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் மன உளச்சலில் இருக்கிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வை தொடர்ந்து புதுவை மாநில அரசு சார்பில் எதிர்த்து வருகிறோம்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது காரணமாக கடந்த ஆண்டு அனிதா என்ற மாணவி இறந்துவிட்டார்.

    இந்த ஆண்டு பிரதீபா என்ற மாணவி இறந்த சம்பவம் மிகவும் வருந்தகூடியது.

    ஜதராபாத் மற்றும் டெல்லியில் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை. நீட் தேர்வில் புதுவை மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


    இதற்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோப்பு தூங்கி கொண்டு இருக்கிறது.

    நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் மன உளச்சலில் இருக்கிறார்கள். மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவத்தில் இடம் கிடைக்கும். ஆனால் நீட் தேர்வு என்ற போர்வையில் மருத்துவம் படிக்க கூடிய வாய்ப்பு தடுக்கப்படுவதால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    தற்கொலை செய்வதை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும். நீட் தேர்வை எதிர்க்க பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநில முதல்வர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு அணியை உருவாக்கி உள்ளார். அதில் எனக்கு உடன்பாடு உண்டு.

    புதுவை மாநிலத்தில் அரசு இடத்தை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இடங்களை பெற்று வந்தனர். ஸ்டாலின் கோரிக்கை ஏற்று உச்சநீதிமன்றம் செல்வதாக இருந்தாலும் பிரதமரை சந்திக்க இருந்தாலும் தயாராக இருக்கிறேன்.

    நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Next Story
    ×