search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சிமன்ற குழு தீர்மானித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - சரத்குமார்
    X

    ஆட்சிமன்ற குழு தீர்மானித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - சரத்குமார்

    ஆட்சிமன்ற குழு தீர்மானித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். #Sarathkumar

    பெரம்பூர்:

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து 2 மாடுகள் கட்டிய மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். அவரை சிலம்பாட்டம், தப்பாட்டம் அடித்து வரவேற்றனர்.

    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் தன் மீது குற்றமல்ல என தெரிவித்து உள்ளார். கொடநாடு விவகார வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமி‌ஷன்அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பா.ஜ.க.விற்கு எதிரான கூட்டணியாக தான் அமையும்.

    கிராம சபையை ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது பண்ணியிருந்தால் வர வேற்று இருப்போம். தேர்தலை மனதில் கொண்டு வாக்கு தேவைக்காக கிராம சபைக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு இருக்கும் ஒரே நண்பர் விஜயகாந்த் தான். ரஜினியும், கமலும் சக பணியாளர்கள் தானே தவிர நண்பர்கள் அல்ல.

    நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன். ஆட்சி மன்ற குழு தீர்மானித்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் துணை பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாவட்ட செயலாளர் முருகேச பாண்டியன், ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sarathkumar

    Next Story
    ×