என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 48 பறக்கும் படை அதிரடி வேட்டை- துணை ராணுவம் விரைவில் வருகை
Byமாலை மலர்12 March 2019 1:48 PM IST (Updated: 12 March 2019 1:48 PM IST)
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனை மேற்கொண்டுள்ளனர். #LSPolls
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இந்த சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மொத்தம் 48 பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனை மேற்கொண்டுள்ளனர். முக்கிய சாலைகள், சந்திப்புகளில் ரோந்து செல்லும் பறக்கும் படையினர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனையில் சென்னையில் பணம் ஏதும் பிடிப்படவில்லை. சட்ட விரோதமாக பணம் கடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து வரும் பறக்கும் படையினர் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது பற்றியும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை தீவிரமாக நடந்தது.
இந்த நிலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி அலுவலக கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி.சேஷசாயி உள்ளார். சென்னை கமி ஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக வடசென்னை கூடுதல் கமிஷனர் தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களது மேற்பார்வையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே துணை ராணுவ படையினர் இன்னும் சில தினங்களில் தமிழகம் வர உள்ளனர். இவர்கள் பறக்கும் படையினருடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். #LSPolls

Next Story
×