search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்டுங்கள்-  கமல்ஹாசன்
    X

    தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்டுங்கள்- கமல்ஹாசன்

    தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.

    கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதனால் தான் தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடுகிறோம். நான் கடந்த 60 வருடங்களில் நிறைய அன்பை பெற்று விட்டேன்.

    மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. நாம் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் திட்டங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். சிஸ்டம் கெட்டுப் போய் விட்டது. அதை நாம் தான் கெடுத்தோம். களைய வேண்டியதை தூக்கி போட்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடும்.

    50 ஆண்டுகளில் திரைத்துறையில் கிடைத்திராத மன நிறைவு தற்போதைய சமீப கால அரசியல் பயணத்தில் கிடைத்துள்ளது. நான் செல்லும் இடங்களில் எல்லாம், சிறிய கிராமங்களில் மக்களின் கண்ணை பார்ப்பதில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது. டார்ச்லைட் கண் கூசும் அளவுக்கு பிரகாசமாக இருக்கும்.

    தமிழக மக்கள் மீது இருக்கும் இழுக்கை துடைப்போம். இந்த முறை பிரதமர் தேர்வு இழுபறியாக அமையும். அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். 3-வது அணிக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

    இது மிக மிக வித்தியாசமான தேர்தல். புரட்சியின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்ட வேண்டும். தமிழகத்தின் சூழல் தான் எங்களை இணைத்திருக்கிறது.

    மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். 3-வது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நிறைய எம்.பி.க்கள் செல்வோம். 3-வது அணி வந்தே தீரும். நாடு முழுவதும் பெரும் தலைவர்கள் மக்கள் நீதி மய்யம் குறித்து யோசிக்கிறார்கள். அந்த மனப்பாங்கு வந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×