search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மழை
    X
    மழை

    கனமழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்கள்

    வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று உள்மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், உள்மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×