என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்ததால் விவசாய பணிகள் மும்முரம்
Byமாலை மலர்10 Nov 2021 12:19 PM IST (Updated: 10 Nov 2021 12:19 PM IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 19.2 மில்லி மீட்டருக்கு மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வந்தது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பாபநாசம் அணை, சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பும் நிலையை எட்டியது.
இதனால் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதுவரை மணி முத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு ஆகிய அணைகள் மட்டுமே நிரம்பவில்லை. மணிமுத்தாறு அணையில் தற்போது 45 சதவீதம் அளவு தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் இன்று மழை குறைந்தது. நேற்று மாலை மற்றும் இரவு சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது. இன்று பகல் நன்றாக வெயில் அடிக்க தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 19.2 மில்லி மீட்டருக்கு மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர் ஆகிய பகுதிகளில் 5 மில்லி மீட்டரும், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்தி குளம், காடல்குடி ஆகிய பகுதிகளில் 2 மில்லி மீட்டரும், வைப்பாறில் 1 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் 7 மில்லி மீட்டரும், கடனா நதியில் 5 மில்லி மீட்டரும், அடவி நயினாரில் 4 மில்லி மீட்டரும், சிவகிரியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய பகுதிகளில் 2 முதல் 1 மில்லி மீட்டர் வரையே மழை பெய்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் மட்டும் 2 மிலி மீட்டர் மழை பெய்துள்ளது. நெல்லை, மணிமுத்தாறு, சேரன் மகாதேவி, அம்பை ஆகிய பகுதிகளில் 1 மில்லி மீட்டர் அளவுக்கே சாரல் மழை பெய்துள்ளது.
தற்போது மழை குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் நடைபெறுகிறது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறந்து செயல்படுகிறது.
நெல்லை மாநகர பகுதிகளில் மழையினால் சேதம் அடைந்த சாலைகளை சமூக ஆர்வலர்கள் பலர் தாங்களாக முன்வந்து, மணல் கொட்டி சரி செய்தனர். பேட்டை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் ஜே.சி.பி. மூலம் சாலையை சரி செய்து ஒழுங்குபடுத்தியதை பொதுமக்கள் பாராட்டி னர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வயல்கள் உழவு செய்யப்படுகிறது. சில இடங் களில் நெல் நாற்று போடப் பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் நெல் நடவு பணிகள் நடந்து முடிந்துள்ளன. மழை காரணமாக இந்த ஆண்டு விவசாயத்திற்கு இறுதி வரை தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×