search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் இல்லை- பரிசோதனை முடிவில் தகவல்
    X

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் இல்லை- பரிசோதனை முடிவில் தகவல்

    • இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
    • உடலில் லேசான கொப்புளங்கள் காணப்பட்டதால் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி என கருதி 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரியவந்தது.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு இதே பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    கேரளா மாநில எல்லையில் குமரி மாவட்டம் அமைந்திருப்பதால் அங்கிருந்து குமரி மாவட்டத்திற்குள் குரங்கு அம்மை நோய் பரவாமல் இருக்க மாவட்ட சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் 10 வயது மகன், மகள் என 4 பேர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டது தெரியவந்தது.

    அவர்களின் உடலில் லேசான கொப்புளங்கள் காணப்பட்டதால் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி என கருதி 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    தனி வார்டில் 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சாதாரண அம்மை நோய் பாதிப்பு மட்டுமே உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இருப்பினும் 4 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வர 2 நாள் ஆகும் என்பதால், சாதாரண அம்மை நோய்க்கான சிகிச்சையை டாக்டர்கள் அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் புனேவில் இருந்து 4 பேரின் ஆய்வு முடிவுகளும் இன்று ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளது. அதில் 4 பேருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்

    Next Story
    ×