search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர தின விழா: அனைவருக்குமான இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம் - மு.க. ஸ்டாலின் - லைவ் அப்டேட்ஸ்

    • சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்.
    • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்துவார்.

    அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார்.

    Live Updates

    • 15 Aug 2024 3:29 AM GMT

      தலைமைச் செயலாளர் முதல்வரை வரவேற்று தென் மண்டல முப்படை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்

    • 15 Aug 2024 3:24 AM GMT

      கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்  

    • 15 Aug 2024 3:23 AM GMT

      சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

    Next Story
    ×