என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பவானிசாகர் அணை பூங்காவில் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு- ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
- ஒற்றை யானையை பூங்காக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.
- பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் வனச்சரகத்து க்குட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் யானைகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி அணையின் மேல் பரப்பில் இருந்து அணைப்பகுதிக்கு வந்து தண்ணீர் குடிப்பது வாடிக்கையாகி வருகிறது.
அதேபோல் இன்று காலை 7 மணியளவில் பவானிசாகர் வனப்பகுதி யில் இருந்து பவானிசாகர் அணை பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த ஒற்றைக்காட்டு யானை அணையின் மேல் பகுதியில் அப்படியே நடந்து வந்து பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்தது.
இதைப்பார்த்து பூங்கா ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். காலை 7 மணி அளவில் யானை வந்ததால் பயணிகள் யாரும் உள்ளே இல்லை. இதனால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. பின்னர் ஒற்றை யானையை பூங்கக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.
பின்னர் யானை மெல்ல மெல்ல பூங்காவில் உணவு கிடைக்குமா என அங்கும் இங்கும் அலை மோதி கடைசியாக ஒரு வழியில் பூங்காவில் நுழைவாயில் இருந்து வெளியே வந்தது. வெளியே வந்த யானை பூங்காவின் எதிரே உள்ள கடைகளுக்கு சென்று ஏதாவது உணவு கிடைக்குமா என தேடி பார்த்தது. அப்போது கடைகள் மூடி இருந்ததால் அவை ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டது.
பின்னர் சிறிது நேரம் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு பிறகு பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.