search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் காவல்துறை பார்வையாளர் சுரேஷ்குமார்சந்தேவ் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலையில் தேர்தலுக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டபோது எடுத்த படம்.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள்

    • மின்னணு எந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாடு கருவிகள், 8 வி.வி.பேட் எந்திரங்கள் மாநகராட்சி பள்ளியில் இருந்து ஆர்.டி.ஓ அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலுக்காக 1,500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. பெல் நிறுவனத்தை சேர்ந்த 8 பொறியாளர்கள் அந்த கருவிகளில் பழுது ஏற்பட்டுள்ளதா? என்று சரி பார்த்தனர்.

    இந்த பணி முடிந்ததும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்றது. அதன் பின்னர் மின்னணு எந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை மாநகராட்சி பள்ளியில் இருந்து எடுத்து ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள எந்திரக்கிடங்கில் வைக்கும் பணி நடந்தது. தேர்தல் காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சந்தேவ் இந்த பணிகளை பார்வையிட்டார்.

    ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர். ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாடு கருவிகள், 8 வி.வி.பேட் எந்திரங்கள் மாநகராட்சி பள்ளியில் இருந்து ஆர்.டி.ஓ அலுவலக வளாக எந்திரக்கிடங்கில் வைக்கப்பட்டது.

    Next Story
    ×