search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
    X

    சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

    • சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை.
    • சட்டசபை மரபு மற்றும் விதிப்படி அ.தி.மு.க.வினர் நடந்து கொள்ளவில்லை.

    சென்னை:

    சட்டசபை தொடங்கியதுமே இன்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.

    இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு,

    * ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வினர் பேச தயாராக இல்லை.

    * சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை.

    * சட்டசபை மரபு மற்றும் விதிப்படி அ.தி.மு.க.வினர் நடந்து கொள்ளவில்லை.

    * அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள கூடாது என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.

    * சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என்றார்

    இதனிடையே, அவை முன்னவர் துரைமுருகன் கூறுகையில், கள்ளக்குறிச்சியை பற்றி தைரியமாக சபையில் பேசி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மலிவான விளம்பரத்தை தேடுகிறார் என கூறினார்.

    Next Story
    ×