என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக உள்ளது: பாஜக மாநில துணைத் தலைவர் கருத்து
- தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை என்றார்.
- ஜெயக்குமாரின் கருத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் பதிலளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, "கூட்டணி தர்மத்தை மீறி பேசும் எந்தவொரு கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பா.ஜனதா தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. அண்ணாமலைக்கு காலே கிடையாது.
பா.ஜனதா இங்கே கால் ஊன்றவே முடியாது. அப்படிபட்ட நிலைமை. உங்களது வாக்கு வங்கிகள் எங்களுக்குத் தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளம்.
தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் தெரிவிப்பேன்"என்று கூறினார்.
ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், "தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது என்றும் கூட்டணி தொடர்பான முடிவுகளை இருகட்சிகளின் தலைமை மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.