search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில்  சைக்கிள் பாதைகள் எங்கே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமாதாஸ் கேள்வி?
    X

    சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமாதாஸ் கேள்வி?

    • சைக்கிள் ஓட்டும் வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
    • பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலினை எக்ஸ் தளத்தில் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே? சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டி பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்?," என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×