என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு: புதிய தேர்வு கால அட்டவணை வெளியீடு
- புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
- புதிய அட்டவணை https://aucoeexam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது, புதிய தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர் 11-ந்தேதி முதல் பிப்ரவரி 17-ந்தேதி வரை நடைபெறும். இதற்கான புதிய அட்டவணை https://aucoeexam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்து.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.