search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என் மண், என் மக்கள் யாத்திரை: நன்னிலம், திருவாரூரில் இன்று அண்ணாமலை நடைபயணம்
    X

    "என் மண், என் மக்கள்" யாத்திரை: நன்னிலம், திருவாரூரில் இன்று அண்ணாமலை நடைபயணம்

    • மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து கடந்த சில நாட்களாக யாத்திரை நடைபெறவில்லை.
    • நன்னிலம் பயணத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் புறப்பட்டு செல்கிறார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார்.

    மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து கடந்த சில நாட்களாக யாத்திரை நடைபெறவில்லை. மீண்டும் நேற்று கும்பகோணத்தில் தனது யாத்திரையை தொடங்கினார்.

    இன்று மாலை 3.15 மணிக்கு நன்னிலத்தில் நடைபயணம் செல்கிறார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார். நன்னிலம் பயணத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் புறப்பட்டு செல்கிறார். மாலை 6 மணிக்கு திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் இன்றிரவு நடைபயணத்தை முடிக்கிறார்.

    நாளை (27-ந்தேதி) கீழ்வேளன், நாகப்பட்டினம் தொகுதிகளிலும், 28-ந்தேதி பூம்புகார், மயிலாடுதுறை தொகுதிகளிலும், 29-ந்தேதி சீர்காழி, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் நடைபயணம் செல்கிறார்.

    இந்த நடைபயணத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருவதால் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களையும் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    Next Story
    ×