என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
போலி அரசியலை உடைக்க பா.ஜ.க. பாடுபட்டுக் கொண்டிருக்கிறது- அண்ணாமலை பேச்சு
Byமாலை மலர்18 Dec 2022 7:45 PM IST (Updated: 18 Dec 2022 8:48 PM IST)
- பாஜக ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை.
- அது மக்களுக்கு புரிவதற்கு சில காலம் ஆகும்.
தமிழக பாஜக சார்பில் சென்னையில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
முதல் முறையாக பா.ஜ.க. சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைத்து மதங்களைச் சேர்ந்த சான்றோர்கள், பெரியோர்களையும் ஒரே மேடையில் பா.ஜ.க. இணைத்துள்ளது. பாஜக ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை. அது மக்களுக்கு புரிவதற்கு சற்று காலம் ஆகும்.
எல்லா மதத்தில் இருந்தும் தலைவர்கள் பாஜகவிற்கு வருவார்கள். அதுவரை கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். போலி அரசியலை உடைக்க பா.ஜ.க. பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை, பெரும்பான்மை என்பதைத் தாண்டி மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×