என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்
- உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
- நாளை அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவதுபோல் அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருகிறார்.
கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்.
தை மாதம் மாட்டு பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் திருவூடலின்போது, பிருங்கி மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளித்த காரணத்தால், கோபம் கொண்ட உண்ணாமலையம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோவிலுக்குச் சென்று விடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார்.
கார்த்திகை தீப திருவிழா முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின்போது, 2-ம் நாள் கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக தன்னைத்தானே குடும்பத்துடன் சுற்றி கிரிவலம் வருவார்.
அதன்படி நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடக்கிறது.
உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
மேலும், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.
நாளை அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாாகள்.
மேலும் கிரிவல பாதை முழுவதிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.