search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான 7 ஆயிரம் வாழைகள் தீயில் கருகி சேதம்
    X

    திருச்செந்தூர் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான 7 ஆயிரம் வாழைகள் தீயில் கருகி சேதம்

    • காற்றின் வேகம் காரணமாக நெருப்பு துகள்கள் அருகில் இருந்த வாழைத்தோட்டத்தின் வேலியில் பரவி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
    • மின்வாரிய பணியாளர்கள் அந்தப் பகுதியில் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நடு நாலுமூலைக்கிணறு பத்துக்கண் பாலம் அருகில் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட சுமார் 7 ஆயிரம் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பத்துக்கண் பாலம் வாய்க்கால் ஓடைகளில் பொதுப்பணித்துறை சார்பில் முட்செடிகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அகற்றப்பட்ட முட்செடிகளை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி அணைக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் காற்றின் வேகம் காரணமாக நெருப்பு துகள்கள் அருகில் இருந்த வாழைத்தோட்டத்தின் வேலியில் பரவி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக வாழை மரங்களில் பற்றியது. இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மின்வாரிய பணியாளர்கள் அந்தப் பகுதியில் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். மேலும் ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது.

    சுமார் 4 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 6 ஏக்கரில் பயிரிடப்பட்ட 7 ஆயிரம் வாழைகள் முற்றிலுமாக தீயில் கருகி நாசமாகியது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×