search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர் பாபுவை பதவியில் இருந்து நீக்கக்கோரி ஆளுநரிடம் பா.ஜ.க. மனு
    X

    சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர் பாபுவை பதவியில் இருந்து நீக்கக்கோரி ஆளுநரிடம் பா.ஜ.க. மனு

    • சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பதில் அளித்துள்ளனர்

    சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜனதா தலைவர்கள் முதல் பிரதமர் மோடி வரை இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

    தனது பேச்சு திரித்து பொய் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர்கள் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். அப்போது, சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக்கோரி மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் "சனாதன எதிர்ப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதும், அதே மேடையில் அமைச்சர் சேகர் பாபு அமர்ந்திருப்பதும் பதவி ஏற்கும் பொழுது எடுத்த உறுதி மொழிக்கு எதிரானது. இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து சட்ட ரீதியாக நீக்கம் செய்ய வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×