என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பஜனை பண்ணுங்க, விழா எடுங்க.. யாரு தடுக்குறாங்கனு பார்ப்போம் - அண்ணாமலை
- நிறுவனங்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
- கோவில்களில் அன்னதானம் வழங்க பா.ஜ.க. முடிவு.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி 22) நடைபெற இருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி வட மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அயோத்தி முழுக்க விழா கோலம் பூண்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியானது. எனினும், இதில் உண்மையில்லை என்றும் இதுபோன்ற தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதனிடையே, நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தமிழ்நாடு முழுக்க அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கொடுக்க தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது. தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு, காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது."
"கோவில்களுக்குள் நடக்கும் விஷயங்களுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்மந்தம். இந்த விவகாரத்தில் மைனாரிட்டி அரசியல் செய்கிறார்கள். நாளை அமைதியான முறையில் கோவில்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை தி.மு.க. அரசு தடுக்க நினைப்பதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. இதனால் பா.ஜ.க.வினர் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யுங்கள், அனுமதி தேவையில்லை."
"அனைத்து கோவில்களிலும் அன்னதானம் கொடுங்கள், திருப்தியாக சாப்பாடு கொடுங்கள், பஜனை பண்ணுங்க, ராமர் கீர்த்தனை பண்ணுங்க. நாளை ஜனவரி 22, ராமர் கோவில் பிரான பிரதிஷ்டையை ஒட்டி கோவில்களில் விழா எடுங்க, யார் தடுப்பாங்கனு பார்ப்போம். இதை தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்," என்று தெரிவித்தார்.