search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடுமுடி அருகே புதைத்த முதியவர் உடல் மீண்டும் வெளியே வந்ததால் பரபரப்பு
    X

    கொடுமுடி அருகே புதைத்த முதியவர் உடல் மீண்டும் வெளியே வந்ததால் பரபரப்பு

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்துள்ளது.
    • உதயகுமார் தனது தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு மீண்டும் 2-வது முறையாக 6 அடி குழி தோண்டி முறையாக காரியங்கள் செய்து துரைசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் காவிரி ஆற்று தடுப்பணை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து முதலில் யாரோ கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. இதை அடுத்து பகுதி சேர்ந்த மக்கள் காவிரி ஆற்று தடுப்பணை பகுதியில் குவிந்தனர்.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை செய்தபோது இறந்தவர் பற்றிய அடையாளம் தெரியவந்தது. பாசூர் அருகே உள்ள செங்கோடம் பாளையத்தை சேர்ந்த துரைசாமி (70) முதியவர் உடல் என தெரியவந்தது.

    அவர் கடந்த மாதம் 25-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு முறையாக கைகட்டு, கால்கட்டு, வாய்க்கட்டு, வாய்க்கு அரிசி, காலில் மஞ்சள் கயிறு கட்டி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள இடுகாட்டில் முறையாக அடக்கம் செய்துள்ளார்கள்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்துள்ளது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு அருகே உள்ள முட்புதரில் உடல் சிக்கிக்கொண்டதால் தண்ணீர் வற்றிய பிறகு துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. போலீஸ் சார்பில் மேற்கண்ட தகவல் தெரிய வந்தது.

    இதனை எடுத்து மலையம்பாளையம் போலீசார் இது குறித்து துரைசாமி மகன் உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். உதயகுமார் தனது தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு மீண்டும் 2-வது முறையாக 6 அடி குழி தோண்டி முறையாக காரியங்கள் செய்து துரைசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இறந்து போன நபரை இரண்டு முறை அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×