search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலத்தில் ரசாயன ஆயில் கலந்த ஒரு டன் பேரீச்சம்பழம் பறிமுதல்
    X

    கடைகளில் உள்ள பேரீச்சம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    குற்றாலத்தில் ரசாயன ஆயில் கலந்த ஒரு டன் பேரீச்சம்பழம் பறிமுதல்

    • குற்றாலத்தில் அருவிக்கரைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்துவிட்டு சபரிமலை சென்று திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது சபரிமலை சீசன் காலம் என்பதால் சபரிமலைக்கு தினமும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்துவிட்டு சபரிமலை சென்று திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் குற்றாலத்தில் வந்து பிரசாதம் வழங்குவதற்காக சிப்ஸ், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம்பழம் அனைத்தும் தரம் குறைந்த மினரல் ஆயில் என்கின்ற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைக்கவே அவர் குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார்.

    இதன் தொடர்ச்சியாக 3 கடைகளில் நடைபெற்ற சோதனையில் சுமார் ஒரு டன் பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பழங்களை ஊழியர்கள் உதவியுடன் அழிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

    Next Story
    ×