search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயநிதியை கூப்பிடவா? - மதுபோதையில் போலீசாரை அநாகரிகமாக திட்டிய ஜோடி கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உதயநிதியை கூப்பிடவா? - மதுபோதையில் போலீசாரை அநாகரிகமாக திட்டிய ஜோடி கைது

    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளது.
    • மதுபோதையில் போலீசாரை அநாகரீகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த ஜோடி தலைமறைவானது.

    சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.

    போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த ஜோடி தலைமறைவானது. இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள ஓட்டலில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×