என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கிறிஸ்துமஸ் விழாவில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார்.
- ஒரு சிலருக்கு மத ஒற்றுமை, நல்லிணக்கம் பிடிப்பதில்லை என்றார்.
சென்னை பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் இன்று மாலை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கிறிஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல். கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது.
எந்த மதமும் வேறுபாடுகளை போதிப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மத ஒற்றுமை, நல்லிணக்கம் பிடிப்பதில்லை.
மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் இங்கு வேரூன்ற முடியாது.
திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் சென்றடைந்துள்ளது.
நிவாரண பணிகளில் அரசுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும்.
மத்திய அரசு நிதி தராத சூழ்நிலையிலும், மாநில அரசு உடனடியாக நிதியை விடுவித்தது.
இந்தியா கூட்டணி தான் 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
இந்த மாதிரி நேரத்திலும், மலிவான அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.