என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தொழில்துறையினர் இணக்கமான தீர்வு காண வேண்டும்.. CII வலியுறுத்தல்
- உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
- மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு நாடுகளில் இருந்து மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.
வியாபாரத்தை எளிமையாக துவங்குவதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அரசின் கவர்ச்சிகர திட்டங்கள் காரணமாக பல்வேறு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
"தொழில்துறை கூட்டமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்கள் அவரவர் துறையில் சிறந்து விளங்கவும், வெற்றி பெறவும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்."
"தமிழகத்தின் பொருளாதார வேகம் மற்றும் உயர் பிம்பம் நீடிக்க சமீபகாலங்களில் தொழில் தகராறில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களும் இணக்கமாக பணியாற்ற கேட்டுக்கொள்கிறோம்" என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்ரீவட்ஸ் ராம் தெரிவித்தார்.