search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    120 மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர்
    X

    120 மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர்

    • முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை:

    உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள ரூ.25,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அவர் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.5.12 கோடியில் 10,000 சதுர அடியில் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்ட SEOC மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    Next Story
    ×