search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமெரிக்க பயணம் சாதனையாக அமைந்தது- சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    அமெரிக்க பயணம் சாதனையாக அமைந்தது- சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • 17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.

    அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

    தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா...

    அமெரிக்கா சென்ற அரசு முறை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. தனிப்பட்ட எனக்கு அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாக இது அமைந்திருக்கிறது.

    17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி உள்ளேன். அமெரிக்க பயணத்தின்போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன.

    சென்னையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி.

    முதலீடுகள் தொடர்பாக சட்டசபையில் எடுத்து கூறி உள்ளோம். சட்டசபையில் பேசியவற்றை இபிஎஸ் படித்து பார்க்க வேண்டும்.

    அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.

    முதலீடுகள் குறைவு என கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×