search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உப்பிலியபுரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    உப்பிலியபுரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

    • ஜனனி நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பகுதியில் உள்ள கானப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், விவசாயி. இவரது மகள் ஜனனி (வயது 18). இவர் நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டிற்கு வந்த ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாத்தா மாலை வேளையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஜனனி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் செபாஷ்டின் சந்தியாகு போலீசாருடன் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜனனி தற்கொலைக்கு காரணம் என்ன? கல்லூரியில் ஏதும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×