என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு- சென்னை ஐகோர்ட் உத்தரவு
- சமூக வலைதளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்ட பதிவுகளை நீக்க உத்தரவு.
- விஜயபாஸ்கர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பி அளித்துவிட்டு, மீதி பணத்தை தராமல் மிரட்டுவதாக ஷர்மிளா புகார் தெரிவித்தார்.
இதனால், ஷர்மிளாவிற்கு எதிராக விஜயபாஸ்கர் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
விசாரணையின் முடிவில், விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்ட பதிவுகளை நீக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தவிர அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தோற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் விஜயபாஸ்கர் என்றும் விஜயபாஸ்கர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.