என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடும் வெயிலிலும் மலையேறினர்- சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம்
- சதுரகிரிக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
- காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலை மேல் உள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் சித்திரை மாத அமாவாசையை (19-ந் தேதி முன்னிட்டு இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி பிரதோஷ நாளான இன்று 17-ந் தேதி அதிகாலை முதல் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலை அடிவாரத்தில் திரண்டனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர். கோடை காலம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வெயில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதை காண முடிந்தது.
மலையேறுபவர்களின் வசதிக்காக மலைப்பாதைகளில் உள்ள சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, காராம் பசு சந்திப்பு, விலாவடி கருப்பசாமி கோவில் பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சிரமத்துடன் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தது.