என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாவட்ட வாரியான இளைஞரணி சமூக வலைத்தள பக்கம்- உதயநிதி
- தகவல்களைப் பகிரும் வசதி உங்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும்.
- பாரதிய ஜனதா கட்சி வெறும் பொய்களையே பரப்பி, பொய்களை மட்டுமே பேசி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமை செயலகமான அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடந்தது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
இன்றைக்குச் சமூக வலைத்தளப் பக்கங்கள் தொடங்கி இருக்கிறோம். ஏற்கெனவே, இளைஞர் அணிக்கு என்று ஒரு சமூக வலைத்தளம் இருந்தாலும், இன்றைக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்குமென தனியாக ஒரு சமூக வலைத்தளப் பக்கம், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், ஃபேஸ்புக் ஆகியவற்றைத் தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இந்தச் சமூக வலைத்தளப் பக்கங்கள் அன்பகத்தில் இருந்தே இயங்கும். இதற்கான பயிற்சிகள் முறையாக வழங்கப்பட்ட பிறகு, அவற்றில் தகவல்களைப் பகிரும் வசதி உங்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும்.
நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், எப்படி அரசியல் களத்தில் மக்களைச் சந்திக்கிறோமோ, அந்தக் களம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இன்றைக்கு இந்தச் சமூக வலைத்தளங்களும் மிக மிக முக்கியமாக இருக்கின்றன. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி வெறும் பொய்களையே பரப்பி, பொய்களை மட்டுமே பேசி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய இயக்கத்திற்குத்தான் வரலாறும் சாதனைகளும் இருக்கின்றன. அவற்றை நாம் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட நம் @dmk_youthwing, 45-ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்த சிறப்புக்குரிய நாளில், மாவட்டவாரியான இளைஞரணி சமூக வலைத்தள பக்கங்களையும், சமூக வலைத்தள பயிற்சியையும் அன்பகத்தில் இன்று… pic.twitter.com/f6HllpuAPL
— Udhay (@Udhaystalin) July 20, 2024