search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
    X

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் கட்சியின் முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தொடங்கியது.

    இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி வாகை சூட திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, சென்னையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், ஏனைய பகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயரும் என்றும் தெரிகிறது.

    Next Story
    ×