search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூங்கா, கடற்கரைக்கு செல்ல வேண்டாம்: அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள்
    X

    பூங்கா, கடற்கரைக்கு செல்ல வேண்டாம்: அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள்

    • மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியாத நிலையில் உள்ள சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது.
    • இன்று மதியம் முதல் சென்னையில் கருமேகம் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    `மிச்சாங்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, அங்கு அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் ரூ.2 ஆயிரத்து 43 கோடி செலவில், 267 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்த காரணத்தால், பிரகாசம் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, ராஜாஜி சாலை, போலீஸ் கமிஷனர் சாலை உள்பட பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் வழக்கம் போல தேங்கவில்லை.

    மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியாத நிலையில் உள்ள சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    'மிச்சாங்' புயல் எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் யாரும், பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மேலும், இன்று (ஞாயிறு) மதியம் முதல் சென்னையில் கருமேகம் அதிகமாக இருக்கும். அதனால் கனமழை அதிகமாகவே இருக்கும் எனவே, எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும் அவற்றை அகற்ற முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×