என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
லாரியில் கடத்தப்பட்ட 400 கிலோ போதை பொருள் பறிமுதல்: டிரைவர் கைது
ByMaalaimalar29 Aug 2023 12:57 PM IST (Updated: 29 Aug 2023 12:57 PM IST)
- லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டியில் சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதில் லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போதை பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (29) என்பவரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 29 மூட்டைகளில் 400 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Next Story
×