என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாமக்கல் மண்டலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு மாதம் 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி
- நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
- ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும், சத்துணவுக்கும் 4.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் ஓமன், கத்தார், துபாய், சவுதி அரேபியா உள்பட 9 வளைகுடா நாடுகளுக்கு மாதந்தோறும் 5 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன.
மலேசியா, சிங்கப்பூருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களால் அங்கு ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 4 மாதங்களாக இலங்கைக்கு மாதந்தோறும் 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மாதந்தோறும் 30 கண்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் அனுப்பப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் வரையில் இந்த ஏற்றுமதி தடையின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:-
இலங்கையில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதந்தோறும் கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் (ஒரு கண்டெய்னரில் 5 லட்சம் முட்டைகள்) அதாவது சுமார் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளுக்கு மாதம் 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது. இலங்கைக்கு தடையின்றி முட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்