search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடித்த 4 பேர் கைது
    X

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டிருக்கும் காட்சி

    டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி கொள்ளையடித்த 4 பேர் கைது

    • டாஸ்மாக் கடைக்கு வந்த சில வாலிபர்கள் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டுள்ளனர்.
    • டாஸ்மாக் ஊழியர்கள் தர மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் சங்கர்ராஜ் (வயது47). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    அங்கு விற்பனையாளராக ரமேஷ் (47) என்பவர் உள்ளார். நேற்று மாலை டாஸ்மாக் கடைக்கு வந்த சில வாலிபர்கள் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டுள்ளனர்.

    டாஸ்மாக் ஊழியர்கள் தர மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பணம் கொடுக்காமல் கடையில் இருந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து தகராறு செய்தனர்.

    மேலும் பீர்பாட்டிலை உடைத்து சங்கர்ராஜ் மற்றும் ரமேசை தாக்கினர். பின்னர் கடையில் இருந்த விற்பனை பணம் ரூ. 80 ஆயிரத்தை எடுத்து சென்றனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் தென்பாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஊழியர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த மூர்த்தி (23), சரவணன் (21), லோகியாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (21) மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட மூர்த்தி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகளும், பிரபாகரன் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    Next Story
    ×