என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் கனமழைக்கு 2 பேர் உயிரிழப்பு
- நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.
- அசோக் நகரில் சாலையில் செல்போன் பேசியபடி சென்ற மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார்.
சென்னை:
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசோக் நகரில் சாலையில் செல்போன் பேசியபடி சென்ற மணிகண்டன் (23) என்பவர் உயிரிழந்தார். செல்போன் கருகியுள்ள நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
தி.நகரில் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி 35 வயதான நபர் உயிரிழந்தார். மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.