search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
    X

    தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    • கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. நேற்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×