என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குமரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு- பூக்கள் உற்பத்தி பாதிப்பு
- கன்னியாகுமரி முதல் வழுக்கம்பாறை வரை உள்ள சாலைகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது.
- தோவாளை, ஆரல்வாய்மொழி, வளவூர், செண்பகராமன் புதூர் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கார்த்திகை மார்கழி மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். இந்த கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பனிப்பொழிவு சற்று குறைந்து இருந்தது. ஆனால் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இன்று அதிகாலையில் பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் குளித்துவிட்டு கோவில்களில் வழிபட்டனர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் விண்ணை முட்டும் அளவில் இருந்தது. பனிப்பொழிவின் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கன்னியாகுமரி முதல் வழுக்கம்பாறை வரை உள்ள சாலைகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இந்த பனிப்பொழிவு காலை 8 மணிக்கு மேல் வரை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு லைட்டுகளை எரியவிட்டவாறு வாகனம் ஓட்டினார்கள்.
இதே போல் ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாகவே இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு லைட்டுகளை எரிய விட்டு வாகனம் ஓட்டி சென்றனர். பனிப்பொழிவின் காரணமாக குமரி மாவட்டத்தில் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, ஆரல்வாய்மொழி, வளவூர், செண்பகராமன் புதூர் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பூக்களின் உற்பத்தி குறைந்ததையடுத்து தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது.