search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெருங்களத்தூரில் மீண்டும் பரபரப்பு: சாலையில் சுற்றிய முதலை குட்டி சிக்கியது
    X

    பெருங்களத்தூரில் மீண்டும் பரபரப்பு: சாலையில் சுற்றிய முதலை குட்டி சிக்கியது

    • இரவு சிறிய முதலை குட்டி ஒன்று சாலையில் நடந்து சென்றது.
    • பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் சாலையில் நேற்று இரவு சிறிய முதலை குட்டி ஒன்று சாலையில் நடந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து இரவு 10 மணியளவில் சாலை ஓரத்தில் முட்புதரில் பதுங்கி இருந்த சுமார் 8 ஒன்றரை அடி நீள முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை கிண்டி பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தின் போது பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் சாலையில் சுமார் 10 அடி நீளமுள்ள பெரிய முதலை சாலையில் நடந்து சென்றது. பின்னர் ஆலப்பாக்கத்தில் சுமார் அடிநீளமுள்ள பெரிய முதலை பிடிபட்டது. தற்போது பெருங்களத்தூரில முதலை குட்டி சிக்கி உள்ளது. பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பிடிபட்ட முதலை குட்டி சதுப்பு நிலப் பகுதிகளில் காணப்படும் மக்கர் இனத்தைச் சேர்ந்தது. பெருங்களத்தூரில் காணப்பட்ட 5-வது முதலை இதுவாகும். நெடுங்குன்றம் ஏரி, ஆலப்பாக்கம் ஏரிகளில் முதலைகள் உள்ளன என்றார்.

    Next Story
    ×