என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு: ஜாக்டோ ஜியோ உடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை
- பிப்ரவரி 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என அறிவிப்பு.
- 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்கள்.
பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வருகிற 26-ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று காலை 12 மணி அளவில் அமைச்சர் எ.வ. வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழுவின் 30 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ. வேலு, முத்துச்சாமி மற்றும் அன்பின் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் தொடர்பாக காலவரையற்ற போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.