search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமூக வலைதளத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது
    X

    சமூக வலைதளத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது

    • ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர்.

    குனியமுத்தூர்:

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ஜூபேர் அகமது (வயது 24). இவர் கரும்புக்கடை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு கோவை மாவட்ட செயலாளராக உள்ளேன். எங்களது தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவர் புகைப்படம் எடுத்து உள்ளார்.

    அந்த புகைப்படத்தை கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவர் தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×