search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    துணை முதல்வராக திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா?- ஜெயக்குமார்
    X

    துணை முதல்வராக திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா?- ஜெயக்குமார்

    • திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
    • மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதல்வர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.

    சென்னை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

    * தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை.

    * திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

    * திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா?

    * மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதல்வர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.

    * திமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க முயற்சி நடப்பது ஏன்?

    * துணை முதல்வராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என்று அவர் கூறினார்.

    Next Story
    ×