search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் தொழிலாளிக்கு அண்ணாமலை போனில் ஆறுதல்- வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி
    X

    விபத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் தொழிலாளிக்கு அண்ணாமலை போனில் ஆறுதல்- வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி

    • முதல் முறையாக வேலைக்காக சென்னை புறப்பட்டு உள்ளார். விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது.
    • முன்பதிவு செய்யப்படாத பெட்டியில்தான் அதிக பலி ஏற்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லை.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்து பற்றி அறிந்ததும் தமிழக பா.ஜனதா சார்பில் ரெயில்வே பயணிகள் நல வாரிய உறுப்பினர் எம்.கே.ரவிச்சந்திரன், ஏ.என்.எஸ். பிரசாத், ஜெயக்குமார் ஆகிய மூவர் குழுவை மாநில தலைவர் அண்ணாமலை அனுப்பி வைத்தார். பாலசோரில் முகாமிட்டுள்ள இந்த குழுவினர் கூறியதாவது:-

    பாலசோரில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டோம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உதவ கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலம் பரசோரா பகுதியை சேர்ந்தவர் குராபா (24). இவருக்கு திருமணமாகி ஒரு கை குழந்தையும் உள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் முதல் முறையாக வேலைக்காக சென்னை புறப்பட்டு உள்ளார். விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது.

    அவரிடம் போனில் பேசி ஆறுதல் கூறிய மாநில தலைவர் அண்ணாமலை குணமாகி சென்னைக்கு திரும்பி வரும்படியும் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித் தார்.

    பலியானவர்களின் உடல் களில் பெரும்பகுதி வடக்கு ஒடிசா சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    தேடி வரும் உறவினர்களுக்கு 'ஸ்லைடு' மூலம் அடையாளம் காட்டப்படுகிறது. அடையாளம் தெரிந்தவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டியில்தான் அதிக பலி ஏற்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் குவித்து வைக்கப்பட்டுள்ள பைகளில் தமிழர்கள் பற்றிய அடையாளங்கள் இருக்கிறதா என்பதை ரெயில்வே மற்றும் காவல்துறை உதவியுடன் பார்த்து வருகிறோம். அனைத்து உடல்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் வரை இங்கேயே தங்கி இருந்து தேவையான உதவிகள் செய்யும்படி மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×