என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
- 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
- கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 1-ந்தேதி திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பழுது இன்று அதிகாலையில் சரி செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தொடக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மாலைக்குள் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.