search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பர்கூர் மலைப்பாதையில் அட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது: டிரைவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    பர்கூர் மலைப்பாதையில் அட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது: டிரைவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மற்றும் தாமரைக்கரை மலைப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு தினமும் கார், வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் அதிகளவில் இந்த வழியாக மைசூருக்கு சென்று வருகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து அட்டை லோடுகள் ஏற்றிக்கொண்டு அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி வழியாக ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை டிரைவர் நடராஜ் (வயது 52) என்பவர் ஓட்டி சென்றார்.

    இதையடுத்து அந்த லாரி பர்கூர்-மைசூரு நெடுஞ்சாலையில் சென்றது. தொடர்ந்து அந்த லாரி பர்கூர் அடுத்த வேலாம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த அட்டைகள் கீழே விழுந்து கிடந்தது.

    இதில் டிரைவர் நடராஜூக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை பெற்று பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அந்த பகுதியில சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பர்கூர் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. இந்த வேலாம்பட்டி பிரிவு பகுதியில் வரும்போது அடிக்கடி லாரிகள் கவிழ்வது நடந்து வருகிறது. ரோடு வளைவு பகுதியாக இருப்பதால் புதிதாக வரும் டிரைவர்கள் வளைவு பகுதியை கவனிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றனர்.

    Next Story
    ×