என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை- நீதிமன்றம் அதிருப்தி
- பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது.
- 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பான வழக்கில், "தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கபடவில்லை" என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது என மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அப்போது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 180 போலீசார் பணியில் உள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கக்கூடிய சூழலில் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் அறிக்கை திருப்திகரமாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.