search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது
    X

    10 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது

    • நீட் தேர்வு கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ-மாணவிகள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • ஒதுக்கீட்டு ஆணை அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 71 மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

    10 ஆயிரம் மருத்துவ இடங்கள் இதன்மூலம் நிரப்பப்படுகின்றன. நீட் தேர்வு கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ-மாணவிகள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று முதல் பதிவு செய்தல், கட்டணம் செலுத்துவது, இடங்களை தேர்வு செய்வது ஆகிய நடைமுறைகள் தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. ஆகஸ்ட் 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி இடங்கள் ஒதுக்கப்படும். இறுதி முடிவு 3-ந்தேதி அறிவிக்கப்படும். அதற்கான ஒதுக்கீட்டு ஆணை அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    இதற்கிடையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    Next Story
    ×